இலங்கைக்கருகில் தாழமுக்க அபாயம்!
>> செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
குறுகிய காலத்தினுள் இரண்டாவது முறையாகவும் பெய்துவருகின்ற அடைமழையால் மீண்டும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா்.தற்போது மழை குறைவடைந்துள்ளபோதிலும் இலங்கைத்தீவுக்கருகாமையில் தாழமுக்க அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார். ரிவாக
நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ,பொலன்னறுவை, அனுராதபுரம், மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதுடன் கண்டி , மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போதும் கடும் மழை பெய்து வருவதாக தெரிய வருகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக