Blogger இயக்குவது.
"இறக்காமப் பிரதேச சபைக்கான கன்னித் தோ்தல், சூடுபிடிக்கிறது தோ்தல் களம்."

இலங்கைக்கருகில் தாழமுக்க அபாயம்!

>> செவ்வாய், 8 பிப்ரவரி, 2011


குறுகிய காலத்தினுள் இரண்டாவது முறையாகவும் பெய்துவருகின்ற அடைமழையால் மீண்டும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா்.தற்போது மழை குறைவடைந்துள்ளபோதிலும் இலங்கைத்தீவுக்கருகாமையில் தாழமுக்க அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார். ரிவாக
நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ,பொலன்னறுவை, அனுராதபுரம், மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதுடன் கண்டி , மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போதும் கடும் மழை பெய்து வருவதாக தெரிய வருகின்றது.

Read more...

இறக்காமப் பிரதேசத்தின் அமைவிடமும் வரைபடமும்.

>> வியாழன், 27 ஜனவரி, 2011

இறக்காமப்பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க சில இடங்கள்
இறக்காமத்தின் ஒரு பகுதி
இறக்காமத்தின் முக்கிய சில நிறுவனங்கள்.
இறக்காமப் பிரதேசத்தின் முக்கிய இடங்கள்


இறக்காமப் பிரதேசத்தின் நிருவாக எல்லைகளை உள்ளடக்கிய வரைபடம்.
இவ்வரைபடம் 2005.01.04 ஆம் திகதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




Read more...

சமூக நிறுவனங்கள்.

>> வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு சமூகத்தின் எழுச்சியில் தாக்கம் செலுத்தக்கூய முக்கிய நிறுவனங்களாக நாம் பின்வருவனவற்றை இனங்காண்கின்றோம்.
  1.   பள்ளிவாயல்
  2.   பாடசாலை
  3.   மதப் போதனை நிலையங்கள். 
   4. வைத்தி சாலை
   5.   தபால் நிலையம்
   6.   நலன்புரிச் சங்கங்கள்
   7.   பிரதேச செயலகம், நகர மற்றும் மாநகர சபைகள்.
   8.   வேறும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்.
   உண்மையில் இத்தகைய நிறுவனங்கள் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ள சமூகம் எழுச்சியின் உச்சத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரதேச செயலகம்-இறக்காமம்

பள்ளிவாசல்கள்
அல்-அஷ்ரப்.ம.ம.வி. இறக்காமம்


தபால்நிலையம்


ஸலபிய்யா அரபுக்கல்லுாரி

Read more...

பிரதேச சபைத்தோ்தல் 2011

>> புதன், 19 ஜனவரி, 2011

தமண பிரதேச சபைக்குட்பட்ட இரு கிராம சேவகா் பிரிவுகள், இறக்காம பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ளமையானது அப்பிரதேச வாழ் முஸ்லிம்களின் கவனத்தை ஈா்த்துணள்ளது. இவ்வாறிணைக்கப்படுவதற்கு முன்புவரை இப்பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட மொத்த சிங்கள வாக்காளா்களின் எண்ணிக்கை 500 ஆகும். அதேவேளை தற்போதைய இப்புதிய இணைப்புக்குப் பின்னா் இவ்வாக்களா்களின் எண்ணிக்கை மேலும் 800 ஆல் அதிகரிக்கும் வாய்ப்புக்காணப்படகிறது. இதன் மூலம் முதன்முறையாக நடைபெறவுள்ள பிரதேச சபைத் தோ்தலில் சிங்கள உறுப்பினா் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

கிராம சேவகா் பிரிவுகளின் இணைப்பானது, பிரதேச சபையில் தமது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதை இலக்காகக்கொண்டதே என இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனா். தவிரவும் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் காணிகள் பலாத்காரமாக சுவீகரிக்கப்படுவதும் சிங்கள மயமாக்கல் துாரிதமாக இடம்பெற்றுவருவதும் வெளிப்படையாக அவதானிக்கக்கூடிய விடயங்களாக மாறியிருப்பதாக இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனா்.

பிரதேச சபைத் தோ்தல் அண்மித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமது சுயலாபங்களுக்காகப் பலகுழுக்களாகப் பிரிந்து வாக்குகளைச் சிதறடிப்போமென்றால் பிரதேச சபையின் தலைமைப்பொறுப்பும் சிங்களவா்களுக்குக் கைநழுவிப்போகும் சந்தா்ப்பம் ஏற்படலாம். எனவே ஊரின் முன்னேற்றம், அபிவிருத்தி, எதிர்காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு எல்லோரும் ஒரு கட்சியில் இணைந்து எமது சந்ததிகளின் எதிர்காலத்தையும், எமது கிராமத்தின் முன்னேற்றத்தையும் பலப்படுத்தவேண்டும் என  புத்திஜீவிகள் மற்றும் தூரநோக்காளா்கள் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனா்.

Read more...

இறக்காமம்

>> செவ்வாய், 18 ஜனவரி, 2011

இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

Read more...

இத்தளம் பற்றி

அம்பாறை, தென் கிழக்கு, Sri Lanka
இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

இறக்காமம் பற்றி

யய

பிரபலமான இடுகைகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to HOME